புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்
அன்பிலே சிறந்த அன்பு தாயன்பு, நமக்கெல்லாம் உதவி செய்திட வேண்டும் என்பதற்காகத்தான் எல்லாம் வல்ல தெய்வம் அன்னை திருவடிவம் கொண்டு பற்பல திருக்கோயில்களில் எழுந்தருளி அருள் புரிவதாக மகான்கள் கூறுகின்றனர். புகழுடன் திகழ்கின்ற புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.
தல வரலாறு
இந்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் தொன்மையானது. தஞ்சாவூரில் தஞ்சகன் என்கிற அசுரனை எதிர்த்து போர் புரிவதற்கு முன்பாக சிவபெருமான் எட்டு திசைகளிலும் சக்திகளை நிறுவினார்.
திசைக்கு ஒரு சக்தி என்னும் விதத்தில், எட்டு சக்திகளை நிறுவினார் சிவபெருமான். அவ்வாறு அவர் நிறுவிய அந்த சக்திகளில் கிழக்கு திசைக்கான சக்திதான் புன்னை நல்லூர் மாரியம்மன்
மிகத் தொன்மையான காலத்திலேயே சிவபெருமான் திருவருளால் இத்தலத்திற்குச் சக்தி வந்துவிட்டார் என்றாலும் இந்த அம்மன் வழிபாட்டிற்கு வந்த காலம் கிபி 1680 ஆகும்.
அந்த ஆண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான வெங்கிஜி மகாராஜ் சத்ரபதி என்பவர், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்ற வேலையில் அவர் கனவிலே அந்த சமயபுரம் மாரியம்மன் தோன்றி புன்னை மரங்கள் நடுவிலே நான் இருப்பதாகக் கூறி அவ்விடத்திலேலே தனக்கு கோயில் காட்டுமாறு ஆணையிட்டார் அப்போது அங்கேய் அம்மன் புற்று வடிவிலிருந்தார்.
ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் என்கிற மகானோடு, வெங்கோஜி மகாராஜா நெருக்கமாக இருந்தார். புன்னை நல்லூர் மாரியம்மன் திருவடிவம் வரக் காரணமாக இருந்தவர், அந்த ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் என்னும் மகான்.
ஆதியிலே வெள்ளை புற்றாக இருந்த மாரியம்மனை மந்திர எந்திரங்களை நிறுவி மாரியம்மன் திருக்கோலம் செய்தார் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர்.
கோடைகாலத்தில் இந்த புன்னை நல்லூர் மாரியம்மன் முகத்திலிருந்து வியர்வை வெளிப்படுகிறது. முத்துக்களை போன்ற வியர்வை வருகின்ற காரணத்தால் இவருக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் என்கிற திருப்பெயர் உள்ளது.
பொதுவாக இவரை மாரியம்மன் என்று அழைக்கின்றார்கள் பக்தர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து அம்மனை வழிபடுவது சிறப்பாகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
அம்மனின் அபிஷேக தீர்த்தத்தால் அம்மை நோய்கள் குணமடையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதே சமயம் இங்கு வந்தால் அணைத்து விதமான பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தஞ்சாவூருக்கு வந்து புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கான வழி கேட்டால் பலரும் சொல்வார்கள்.
Video Source : Namma Bhoomi Namma Samy Youtube Channel